Posts

Showing posts from January, 2018

ஆசிரியர் பணி பயிற்சி

    இன்று வகுப்பில் ஆசிரியர் எங்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.      அதில் இருந்து நாங்கள் எங்கள் கற்பித்தல் செயலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்தும், மாணவர்களின் கற்றல் திறனை மேலும் ஊகுவிக்கும் வழிமுறைகளையும் அறிந்து கொண்டேன்.      அடுத்த மாதம்  முழுவதும் கற்பித்தல் தொடர்பான பயிற்சி எங்கள் கல்லூரியில் வழங்க வேண்டும் என பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது என ஆசிரியர் கூறினார்.

பாடங்களை புரிந்து கொள்ளல்

     "பாடங்கள்"  என்பது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் நாம் அனைவரும் கற்று கொள்ள வேண்டிய வாழ்க்கை முறையை தெளிவாக கூறும் அமைப்பு, நமது  அறிவை வளர்த்து கொண்டு மேலும் பல அனுபவம் பெற வேண்டும் என்பதற்க்காக பல ஆண்டுகளாக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் வடிவமைக்கப்பட்டது.       அதை முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர் உதவியுடன் நாம் அனைவரும் அறிந்து அதை தொடர்ந்து நம் வாழ்வில் பின்பற்றி வாழ வேண்டும் என புரிந்து கோண்டென்.        மேலும், அப்பாடத்தில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதும் அவசியம் எனவும் அறிந்து கொண்டேன்.

பாலின சமத்துவம்

     இன்று வகுப்பில்  "பாலின சமத்துவம்"  பற்றியும், அதை தொடர்ந்து பல முறைகளில் மேம்படுத்திடவும் , மாணவர்கள் அனைவரும் பாலின சமத்துத்வத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிந்து கொண்டோம்.       பள்ளியில் மட்டும் இன்றி நாம் வாழும் பிற சமுக சூழலிலும் பாலின சமத்துவம் போற்றப்பட வேண்டும் எனவும் அறிந்து கொண்டேன்.       நான் எனது  கற்பித்தல் பயிற்சியின் போது மாணவர்களை எவ்வித  பாலின வேறுபடும் இன்றி அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என கற்ற

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

      எங்களை ஆசிரியை அம்மா அவர்கள் ஒரு பாடத்தை பல கோணங்களில் ஆய்வு செய்து ஒப்படைப்பு எழுதி வர சொன்னார்.       இன்று  ( 26.01.2018 ) அனைவரும் எங்களது ஒப்படைப்புகளை ஆசிரியர்  அவர்களிடம் சமர்பித்தோம்.        ஆசிரிய அம்மா அனைவரையும்  பாராட்டினர்.

சொல் வளம்

     நேற்று வகுப்பில் கையெழுத்து அழகாக, தெளிவாக, திருத்தமாக இருக்க வேண்டும் என என் ஆசிரியர் கூறினார்.       இன்று நமது பேச்சு,  அதாவது  "சொல் வளம்"  என்பதும் மிகவும் தெளிவாக, சரளமாக, பிறருக்கும் புரியும்படி இருக்க வேண்டும் என கூறினார்.       ஒருவரின் சொல் வளத்தை பெருக்கிட கையாள வேண்டிய  வழி முறைகள் சில பின்வருமாறு,        * தினந்தோறும் செய்தித்தாள் வாசித்தல்,        * பாட புத்தகங்களை வாசித்தல்,        * சரளமாக பேச பழகுதல்,        * செய்யுள் , கவிதை பாடல்களை படிக்கக் கற்றல் போன்ற செயல்கள் மூலம் நாம் நமது  "சொல் வளத்தை"  மேம்படுத்திடலாம்.

கையெழுத்து

    கையெழுத்து என்பது  "ஒருவரின் தலையெழுதையே தீர்மானிக்கும்"   என்பார்கள்.      எனவே, கையெழுத்து மிகவும் அழகாக இருக்க வேண்டும் என எனது  ஆசிரியர் நாள்தோறும் கூறுவார்.  நானும் அவர் சொல் கேட்டு  எனது கையெழுத்தை மாற்றினேன்.      இப்போது நான் மிகவும் அழகாகவும், தெளிவாகவும் எழுதுகிறேன் என  என் ஆசிரியர் என்னை பாராட்டுவார்.  எனது கற்பித்தல் பயிற்ச்சி காலத்திலும் எனது மாணவர்களின் கையெழுத்தும்  அழகாக இருக்க உதவுவேன்.

அடிப்படை உரிமைகள், கடமைகள்

     நாம் ஒவ்வொருவரும் நம்முடைய இந்திய நாட்டில் சுதந்திரமாக வாழ அரசு சில அடிப்படை உரிமைகள், சில சமயங்களில் நமது கடமைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அடிப்படை உரிமைகள்,       சட்டப்பிரிவு 14-32,       சட்டப்பிரிவு 21(A), மற்றும்       சட்டப்பிரிவு 19(1)ல் நமக்கென சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. கடமைகள்,        ஒவ்வொரு இந்திய மக்களும் ஒருவருக்குகொருவர் சகோதரர்,               நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை காத்தல்,         தேசிய கீதம், கோடி, கோள்கைகளை மதித்தல்,          காடுகள், போது சொத்துக்களை பாதுகாத்தல் என பல கடமைகள் உள்ளன.

விளிம்பு நிலைக் குழந்தைகள்

     பெற்றோரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற, அடிப்படை வசதி கூட இல்லாத குழந்தைகள்  "விளிம்பு நிலை குழந்தைகள்"  எனப்படுவர்.        இவர்கள் ஒரு வேலை உணவுக்கே மிகவும் சிரமப்பட்டு அதுவும்  சில வேளையில் கிடைக்காமல் போய்விடும்.         இதனால் அவர்கள் பெரிதும் கஸ்ட்டப்படுவர்.  வறுமையால் பள்ளிக்கு போகாமல் கூலி தொழிலுக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுவர்.          இவர்களுக்கு ஆதரவாக யாரும் இல்லாததால் அவர்கள் தங்கள் விருபம் போல வாழ்வர்.  சில சமூக கேடான செயலிலும் ஈடுபட்டு வாழ்க்கையில் கஸ்ட்டப்படுவர்.

ஸ்கீமா

     "ஸ்கீமா"  எனும் மனப்பதிவு கோட்பாடு மூலம் குழந்தைகளிடம் அறிதிரன் வளர்ச்சி,  சிந்தித்தல் திறன், ஆராயும் திறன், தர்க்க ரீதியான சிந்தித்தல் போன்ற பண்புகள் வளர்கிறது என்பதை புரிந்து கொண்டேன்.        ஸ்கீமா என்பது நான்கு உட்கூறுகளை கொண்டது.  அவையாவன,          1. தன்வயப்படுத்துதல்,          2. பொருந்துதல்,          3. இணங்குதல்,          4. ஒருங்கமைத்தல். ஆகும்.

உரைகள்

     நாம் சிறு வயது முதலே  பல பள்ளி பாட புத்தகங்களை படித்துள்ளோம்.       அவை அனைத்தும் கதை வடிவிலும், செய்யுல் வடிவிலும் உள்ளன. அதை ஆசிரியர் " உரை" வடிவில் அதாவது, கதையாக கூறுவார்.  நமக்கு எளிமையாக புரியும் படி சிறப்பாக சொல்லுவார்.      இவ்வாறு நாம் பல தகவல்களை உரை வடிவிலே படிக்கிறோம்.  உரை வடிவிலான பாடங்கள் சில,                  அறிவியல்,                    சமூக அறிவியல்,          கணிதம்,   போன்ற பல பாடங்களை அறியலாம்.

அனுபவ நிலைக் கலைத்திட்டம்

     வாழ்க்கை சூழலில் இருந்து நேரடியாக பெரும் ஒருவரின் கற்றல் நிலையே அதனால் ஏற்படும் முன் அனுபவம், அதன் மூலம் வாழ்க்கையின் பிற சூழலை கையாள கற்றுக்கொள்ள உதவுவதே  "அனுபவக்கற்றல்"  எனப்படும்.      என்னுடைய கற்றல் அனுபவம் மூலம் கணித பாடம் எவ்வாறு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்.      எளிய முறையில் கணிதம் கற்பித்தல், சூத்திரம், கொள்கை, கோட்பாடு, தேற்றம், ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்கும் முறையை கற்று கொண்டேன்.

பெண்கள் பாதுகாப்பு

     இப்போதெல்லாம் பெண்கள் சுதந்திரமாக, தனியாக வெளியே செல்வது, ஒரு வேலையை தனியாக செய்வது, சமூக போது செயலில் ஈடுபடும் போதும் பாதுகாப்பு இன்றி சிரமப்படுவர்.      சில சமூக நபர்கள் பெண்களுக்கு துன்பம் தருவார், பெண்களை கேலி செய்வார், பாலியல் துன்பம் கொடுத்தல், போன்ற தீய செயல்களில் ஈடுபடுவர்.       எனவே, இவற்றை தடுத்து பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்திட அரசு சில பாதுகாப்பு சட்டங்களை இயற்றியுள்ளது.  அவற்றை முறையாக நாம் பின்பற்றிட வேண்டும் என்பதை நான் கற்று கொண்டேன். அதை எனது சமூக குல

அறிவின் வடிவங்கள்

     நாம் அனைவருக்கும் வேவ்வேறு விதமான அறிவு திறனை பெற்றுள்ளோம்.      சிலர்,                         மீத்திறன் மிக்கவர்கலாகவும்,                 சராசரி கற்றல் திரனுடயவர்களாகவும்,                  கற்றல் குறைபாடு உடையவர்களாகவும் காணப்படுவர்.        இவ்வாறு, மாணவர்கள் பல நிலைகளில் அறித்திரனை பெற்று தங்களது கற்றல் மூலம் அறிவினை மேம்படுத்த

பேச்சு மொழி

     நாம் அனைவரும் பிறந்தது முதல் நமது தேவையை நிறைவு செய்யவும், தமது எண்ணம், விருப்பம் , உணர்வுகளை வெளிப்படுத்திட நாம் பயன்படுத்தும் வாய் மொழியே  "பேச்சு மொழி" எனப்படும்.      இது முதலில் நமது தாயிடம் தொடங்கி பிறகு தந்தை, உடன் பிறந்தவர்கள், மற்ற உறவினர்கள்,  நண்பர்கள், அக்கம்பக்கம்  வசிப்பவர்கள் என அனைவரிடமும் கற்றுக்கொள்வதாகும்.       இதற்கு முறையான இலக்கண அமைப்பும், விதியும் தேவையில்லை. நம்முடைய விருப்பத்திற்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

பொங்கல் விழா கொண்டாட்டம்

    இன்று எங்கள் தாகூர் கல்வியியல் கல்லூரியில்  "பொங்கல் விழா" கொண்டாடப்பட்டது.    இன்று எங்கள் கல்லூரியில் மாணவாகள், மாணவிகள், ஆசிரியர்கள், முதல்வர், நிர்வாக தலைவர்கள், பிற துறை தலைவர்களும் பொங்கல் விழாவில் கலந்துகொண்டனர்.       விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  இதன் மூலம் நமது தமிழர் பண்பாடு, பாரம்பரியம், மரபு, அதன் சிறப்புகளை நம்மால் அறிய முடிகிறது.  நாங்களும் மகிழ்ச்சியாக கொண்டாடினோம்.

குழு விவாதம்

     இன்று வகுப்பில்  "குழந்தை பருவம்"  பற்றி ஆசிரியர் விவாதம் செய்ய  சொன்னார்.  நாங்கள் அனைவரும் எங்களுக்கு தெரிந்த கருத்துக்களை கூறினோம்.      இதில் விளையாட்டு, கதை கேட்டல், கதை கூறுதல், பிறரை போல அல்லது பிற விலங்குகளை போல ஓசை எழுப்புதல், நடித்துக்காட்டுதல் போன்ற  செயலில் ஈடுபடுவர் என்பதை அறிந்து கொண்டோம்.        மேலும், பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். புதிய தகவல்களையும் அறிந்து கொண்டோம்.

சுற்று சூழல்

     ஒவ்வொரு மனித வாழ்விலும் "சுற்று சூழல்"  என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது என்பதை நாம் அறிவோம்.      எனவே, நாம் அதை காப்பாற்ற வேண்டியது நமது கடமை ஆகும். "சுற்று சூழல் தினம் ஜூன்-5"  என நாம் அனைவரும் அறிவோம்.      இது குழந்தைகள் வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகிக்கிறது.  "நீர், காற்று, ஒலி", என அனைத்தும் அவர்களது அறிவுத்திறன், மனவெழுச்சி திறன், உடல் வளர்ச்சி ஆகியவற்றை பெரிதும் தீர்மானிக்கிறது.

விளையாட்டு

     குழந்தைகள் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுவர்.  எனவே, பள்ளி பாட வேளையுடன் விளையாட்டுக்கு என ஒரு மணி நேரம் ஒத்துக்கப்பட்டது.      விளையாட்டு மூலம் குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மன நிறைவு, அறிவு திறன், சிந்தித்து செயல்படுதல், பிரச்சனைக்கு தீர்வு காணும் திறன், தர்க்க ரீதியாக சிந்தித்தல் திறன் போன்றவை மேம்பாடு அடைகிறது.      இதனால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், சுறு சுறுப்பாகவும், நல்ல உடல் திறனுடனும் செயல்படுவர் என்பதை புரிந்து கொண்டேன்.

மொழி கோட்பாடு

     மொழிகளை பற்றி ஆராய்ச்சி செய்யும் துறையே ,  "மொழியியல்"  எனப்படும்.      மேலும், மொழி கோட்பாடு என்பது மொழியாரிவை பெறுதல், பயன்பாடு, பேசுதல், படித்தல், பிற சூழலை கையாளுதல், மற்ற மொழிகளை எளிதில் புருந்து கொள்ளல் போன்ற செயல்களை எளிமையாக அமைத்து தருவது இதன் பணியாகும்.       வகுப்பில் மாணவர்களும் மொழியில் புலமை மிக்கவர்களாக திகழ்வார்கள்.

விரிகள கலைத்திட்டம்

     இதை ஒன்றிணைந்த கலைத்திட்டம் என்பர்.      ஒரு குறிப்பிட்ட பாடத்தலைப்பில் பல்வேறு பாடங்களை பல பிரிவுகளாக இணைத்து வழங்குவதே இதன் நோக்கமாகும்.      இதனால்  மாணவர்கள் ஒரு பாடம் கற்பதன் வாயிலாக அனைத்து பாடம் பற்றிய தகவல்களை, அறிவை பெற்று உயர் நிலை தேர்ச்சி பெற்றிடுவர்.

பாலின தன் அடையாளம்

     ஒருவர் சமூகத்தில் தன்னை எவ்வாறு அறிமுகம் செய்து கொள்கிறார் என்பதே பாலின தன் அடையாளம் எனப்படும்.      மேலும், தன்னை ஒரு ஆண் அல்லது பெண் என சமூகம் அறிந்து கொள்ளும் வகையில் தனது நடத்தைகள், செயல்கள், பண்புகளை அமைத்து கொள்ளலாம்.      பிற மனிதர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்தி காட்டுவதே "பாலின தன் அடையாளம்" எனப்படும்.

கணித ஆசிரியரின் பண்புகள்

     கணித பாடத்தில் தேர்ச்சி, சிறந்த கணித புலமை, நல்ல அறிவு மட்டும் பெற்றிருந்தால் போதாது.      அதை மாணவர்களிடம் எளிதாக கொண்டு சேர்க்கும் நுட்பமான முறைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்.       அதற்கேற்ப ஒரு சிறந்த கணித ஆசிரியராக நான் எனது கணிதம் கற்பத்தல் பண்புகளை சிறப்பாக அமைத்துக்கொள்வேன்.மாணவர்களுக்கும் எளிமையாக புரியும் வகையில் எனது கணித செயல்பாடுகளை அமைத்து கொள்வேன்.

கணிதம் கற்பித்தல்

     கணிதம் கற்பித்தல் என்னுடைய major பாடம்.  இதில் நான் கணிதம் எவ்வாறு மாணவர்களுக்கு புரியும்படி நடத்த வேண்டும் என்பதை தெளிவாக புரிந்து கற்று கொண்டேன்.      கணிதத்தில் உள்ள மிக நுண்ணிய நுட்பமான முறைகளையும் அறிந்து எனது கற்பித்தல் திறனை மேம்படுத்திக்கொண்டேன்.      மேலும், மாணவர்களுக்கும் கணித சூத்திரம், கொள்கை, தேற்றம், சில கணித வரையறைகள் என அனைத்தும் எளிதில் புரியும்படி நடத்தவும் கற்று கொண்டேன்.

கற்றலும் கற்பித்தலும்

    கற்றல் எனும் செயல் சிறப்பாக அமைய கற்ப்பித்தல் முறையும் சிறப்பாக அமைய வேண்டும்.      மாணவர் மைய கற்பித்தல் முறை மிகவும் சிறந்தது என்பதை புரிந்து  கொண்டேன்.       நானும் எனது கற்ப்பித்தல் செயலில் மிகவும் நுட்பமான முறைகளான கற்ப்பித்தல் கருவிகள், செயல் திட்டங்களை பயன்படுத்துவேன்.

மெய்நிகர் வகுப்பறை

     மாணவர்கள் வகுப்பரையில் கற்கும் பாடம் தற்போதைய நவீன அறிவியல் துணைக்கரவிகளான கணினி, பவர்பாயிண்ட், ஓ ஹச் பி சீட்,  ஊடாடும் வெள்ளை பலகை போன்றவைகளை பயன்படுத்திடும் வகையில் அமையும் வகுப்பறை மேனிநிகர் வகுப்பறை எனப்படும்.