Posts

Showing posts from July, 2018

மக்கள் ஆட்சியில் கல்வியின் தாக்கம்

     மக்களாட்சி / ஜனநாயகம் என்பது Democracy என்ற ஆங்கிலச்சொல் ஆகும். Democracy என்ற சொல் "கிரேக்கம்" மொழியில் இருந்து வந்ததாகும். Democracy என்பது "Demos + Kratis"  என்ற இரு சொற்களையும் இணைத்து உருவானது ஆகும். இதில்,             Demos என்றால் people(மக்கள்) என்றும்,       Gratis என்றால் Energy(ஆற்றல்) என்றும் பொருள்படும். கல்வித்தாக்கங்கள்; ===================             *  கல்வியில் சம வாய்ப்புகள்,      * இலவச கட்டாய கல்வி,      * வயது வந்தோர் கல்வி,      * குழைந்தை மைய கல்வி,      * கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், என பல தாக்கங்களை கல்வியில் ஏற்படுத்தியுள்ளன என்பதை புரிந்து கொண்டேன்.        

கல்வியில் நவீனமயமாக்கல்

     வகுப்பில் இன்று  கல்வியில் நவீன தொழில் நுட்ப வளர்ச்சியால் பல்வேறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களாவன;       1. திண்ணைப் பள்ளியில் இருந்து நவீன வகுப்பரை,       2. சான்றிதழ் வழங்கப்படுதல்,       3. அறிவியல் வளர்ச்சி,       4. இணையதள வசதி,       5. பல்வேறு வகையான கற்பித்தல் கருவிகள், என பல முறைகளில் கல்வியில் பல இடங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.      யோகாவில்  "உடல்நலக் கல்வி"  பற்றியும் அதனால் ஏற்படும் நன்மைகள், அதற்கான காரணம் ஆகியவற்றை தெரிந்து கொண்டேன்.      

குறைபாடுடைய குழந்தைகளை அணுகும் முறைகள்

     வகுப்பில் சாதாரண மாணவர்களுடன்  "கற்றல் குறைபாடுடைய மாணவர்கள்"  இணைந்தே கற்றலில் ஈடுபடுவர்.  எனவே, அவர்களுக்கு சிறப்பான கற்றல் கற்பித்தல் அணுகு முறைகள் தேவை என்பதை புரிந்து கொண்டேன்.      இத்தகைய மாணவர்களுக்கான அணுகு முறைகள்,       1. அறிதிறன் அடிப்படை அணுகுமுறை,       2. புலன் காட்சி அணுகுமுறை,       3. குறைபாடு அடிப்படையிலான அணுகுமுறை,       4. சமூக அடிப்படையிலான அணுகுமுறை. என நான்கு நிலைகளில் அவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கச் செய்யலாம்.       மேலும், நம்முடைய பாரம்பரிய பண்பாட்டு கூறுகளும், அதை தொடர்ந்து காத்தல், அடுத்த தலைமுரைக்கு கொண்டு சேர்க்கும் முறைகளையும் அறிந்து கொண்டேன்.

முதலுதவி செய்தல்

     நான் இன்று வகுப்பில் முதலுதவி சிகிச்சை செய்தல், அதற்கான  சிகிச்சை முறைகள், உதவி செய்யும் பொழுது நாம் மேற்கொள்ள வேண்டிய செயல் ஆகியவை பற்றியும் தெரிந்து கொண்டேன். மேலும், முதலுதவி செய்தலின் 3 நிலைகள்,      A - Airway      B - Breathing      C - Circulation ஆகியவை ஆகும்.      பள்ளியில் உடல்நலக் கல்வி எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் அதை மாணவர்களுக்கு கற்பிக்கும் முறைகளையும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் தெரிந்து கொண்டேன்.

எனது கற்றல் திறன்

     நேற்று வகுப்பில் ஆசிரியர் மாணவர்களின் கற்றலை மதிப்பிடும் முறை, அதற்கான சூத்திரம், வழிமுறைகள் ஆகியவற்றை கற்று கொடுத்தார்.       மேலும், அதில் வீட்டு வேலை செய்ய வேண்டும் என ஒரு கணக்கை கொடுத்தார்.  அதை நாங்கள் சரியாக செய்து ஆசிரியரிடம் ஒப்படைத்தோம். அதில் உள்ள அட்டவணை, வரைபடம், கணக்கிடும் முறை அனைத்தையும் சரியாக செய்துள்ளேன்.       எனது major படத்தில் முதல் அலகு தேர்வு எழுதினோம்.  எனக்கு அதில் இரண்டு கணக்குகள் தெரியவில்லை.  பிறகு நான் எனது நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.       இன்று யோகாவில் நமது உடலில் உள்ள முதுகு எலும்பின் வடிவம், அதன் பாதுகாப்பு முறை, அதற்கான உடற்பயிற்சி செய்யும் முறை என அனைத்து விதமான தகவலையும் அறிந்து கொண்டேன்.

வளரிளம் பருவத்தினரை புரிந்து கொள்ளல்

     நான் எனது கற்பித்தல் பயிற்சியின் போது பயிற்சி பெறும் பள்ளிகளில் படிக்கும் வளரிளம் மாணவர்/ மாணவி  ஒருவரை பற்றி தெரிந்து கொண்டு அவர்களை ஆய்விற்கு உட்படுத்தி அவரது பிரச்சனையை தீர்க்க வேண்டும்.      அவர்களது வாழ்க்கையில் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதை எங்கள் ஆசிரியர் கூறியதை புரிந்து கொண்டேன்.       மேலும், அனைத்து வகையான மாணவர்களின் கற்றலை மதிப்பிடும் முறையும், தேர்ச்சி சதவீதம், பிற பாட தொடர்பு ஆகியவற்றை அறிந்து கொண்டேன்.       தேர்ச்சி வீதத்தை கணக்கிடும் சூத்திரம், கணக்கிடும் முறைகள், சரியான வழிமுறைகளையும் அறிந்து கொண்டேன்.

புதிய அறிவை பெறல்

     இன்று வகுப்பில் முதல் முறையாக "அறிவராய்ச்சியியல்"  பாடத்தில் அறிவு, அறிவின் வகைகள், அறிவு - திறன் இவற்றிற்கிடையேயான வேறுபாடுகள் இவற்றை தேர்வு எழுதினோம்.      மேலும், யோகாவில் முதலுதவி பற்றியும் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் தெரிந்து கொண்டேன்.      எங்கள் ஆசிரியர் இன்று " GEOFFERY MUTAI" என்பவர் பற்றி கூறினார்.          * இவர் ஒரு மாரத்தான் வீரர்.          * 2011-ல்  நியூயார்க்கில் நடந்த மாரத்தான் போட்டியில் 2மணி 29வினாடிகள் ஓடி ஏற்கனவே இருந்த உலக சாதனையை முறியடித்தார்.           * எவ்வாறு சாதித்தீர்கள் என்று இவரை கேட்ட போது அதற்கு இவர் "எனது குடும்ப வறுமை" - யால் தான் என்னால் சாதிக்க முடிந்தது என்றார்.       மேலும், உலக அளவில் மிகவும் பிரபலமான தொழிலதிபர் ஆன "RICHARD BRANDSON" அவரை பற்றியும் தெரிந்து கொண்டேன்.  இவர் உலகளவில் உள்ள 400 தொழில் நிறுவனங்கள் நிறுவினார்.  அவை அனைத்தும் இன்று மிகவும் புகழ் பெற்று திகழ்கிறது.

மாணவர்களின் கற்றலை மதிப்பிடல்

     கற்பித்தல் பயிற்சியின் போது மாணவர்களின் கற்றலை மதிப்பிட இரு முறைகள், அதன் உட்கூறுகள் பற்றி தெரிந்து கொண்டேன். அவையாவன,      1. மையபோக்கு அளவைகள்:          * சராசரி,          * இடைநிலை,          * முகடு.      2. சிதறல் அளவைகள்:          * வீச்சு,          * சராசரி விலக்கம்,          * கால்மான விலக்கம்,          * திட்ட விலக்கம். ஆகியவை பற்றியும் அதற்கான சூத்திரம், கணக்கிடும் முறை பற்றியும் தெளிவாக புரிந்து கொண்டேன்.       மேலும், வகுப்பில் நாங்கள் இரு குழுவாக பிரிந்து "கல்வியில் சமுதாயத்தின் தாக்கம்"  குறித்து விவாதம் செய்தோம்.  அதன் நிறைகள், குறைகள் பற்றியும் அறிந்து கொண்டோம். ஆசிரியர் எங்களின் கருத்துக்களை கேட்டு மேலும் சில தகவல்களையும், அதற்கான தீர்ப்பையும் வழங்கினார். இதற்காக அனைவரையும் பாராட்டினர்.

கற்றல் திறனில் குறைபாடு

     வகுப்பில் பல வகையான குழந்தைகள் இருப்பர்.  அதில் சிலர் கற்றலில் வேறுபட்டு காணப்படுவர். சில திறன்கள்,          படித்தல்,        எழுதுதல்,        கவனித்தல்,        ஆர்வம் காட்டுதல்,        பேசுதல்,         புரிந்து கொள்ளல். போன்ற சில குறிப்பிட்ட திறன்களில் குறைவுடன் காணப்படும் குழந்தைகளே "கற்றல் திறனில் குறைபாடு"  உடைய குழந்தைகள் எனப்படுவர்.        இத்தகையோரின் கற்றல் குறையை நீக்க ஆசிரியர் தேர்வு செய்த பல வகையான கற்பித்தல் முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.        நானும் எனது கற்பித்தலில் மாணவர்களின்  "கற்றல் குறைபாட்டை" நீக்கிடும் வகையில் எனது கற்பித்தலை அமைத்து கொள்வேன்.        

தகவல் பரிமாற்றம்

     இன்று வகுப்பில்  "ஆசிரியர் பயிற்சி"  குறித்து மிகவும் பயனுள்ள தகவல்களை நான் தெளிவாக புரிந்து கொண்டேன்.  மேலும், அறிவு-திறன், கற்பித்தல்-பயிற்சி, அறிவு-தகவல் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாடுகளை அறிந்து கொண்டேன்.      மேலும், வகுப்பில் "Buster donglas" & "Mike Tyson" ஆகியோர் மிகவும் வலிமையான குத்துச்சண்டை வீரர்கள். Mike Tyson என்பவர் மிகவும் பலசாலி ஆவர்.      இவரை  Apr- 11- 1990 அன்று Buster donglas தோற்கடித்தார்.  போட்டியில் Donglas வெற்றி பெற்றார்.  உலக மக்கள் அனைவரும் அன்று அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.  அவரது வெற்றியை அனைவரும் பாராட்டினர்.       வகுப்பில்  "தகவல் பரிமாற்றம்"  மூலம் நான் மேற்கண்ட தகவல்களை அறிந்து நான் எனது அறிவை வளர்த்து கொண்டேன்.  இது போன்று நானும் எனது கற்பித்தல் பயிற்சி வகுப்பில் "தகவல் பரிமாற்றம்" அமைய எனது அறிவை வளர்த்து கொள்வேன்.

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்

     IQ level 70க்கும் குறைவாக இருந்தால் அந்த குழந்தைகள் "மனவளர்ச்சி குன்றியவர்கள்" ஆவர்.                          Mental age         IQ =  ------------------------------ × 100                   Chronological age      இவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். அவைகளாவன,        1. பேதையர்கள் ( 50 - 70 ),        2. மூடர்கள் ( 25 - 50 ),        3. முட்டாள்கள் ( 25 -க்கும் குறைவு ).        இதன் மூலம் நம் ஒவ்வொருவரின் IQ அளவு எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொண்டேன்.         இன்று யோகாவில் அடுத்த முறையான நின்று கொண்டு செய்யும் ஆசனம், படுத்து கொண்டு சேய்யும் ஆசனம் பற்றியும் அதன் உட்பிரிவுகள், நன்மைகள் பற்றியும் விரிவாக தெரிந்து கொண்டேன்.

யோகா பயிற்சி

     இன்று வகுப்பில் யோகா ஆசிரியர் "சூர்ய நமஸ்காரம்"-த்தில் உள்ள 12 வகையான ஆசனங்கள் செய்து காட்டினார்.  நாங்களும் அதை பார்த்து முறையாக அனைத்து ஆசனங்களையும் செயதோம்.  அடுத்து ஆசனங்களில் மூன்று வகையான                1. உட்கார்ந்து செய்தல்,        2. நின்று கொண்டு செய்தல்,        3. படுத்துகொண்டு செயதல். இவற்றில் முதலாவதான "உட்கார்ந்து செய்யும்" ஆசனத்தில் 6 வகைகள் உள்ளன.         அவைகளை முறையாக செய்தும், அதன் பயன்களையும் தெளிவாக அறிந்து கொண்டோம்.  மேலும், யோகவால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் தெரிந்து கொண்டோம்.        

பல வகை திறன்கள்

திறன்:               திறன் என்பது "கடினமான வேலையை எளிமையாக செயதல்"  ஆகும். மேலும், பலவகையான திறன்கள் பின்வருமாறு; 1. கற்பித்தல் திறன்:                ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே நிகழும் வகுப்பறை செயலும், அதன் வாயிலாக பெரும்  "அறிவு" இதில் அடங்கும். 2. கற்றல் திறன்:                   மாணவர்கள் வகுப்பில் ஆசிரியர் உதவியுடன் பெரும் "அறிவு" கற்றலில் அடங்கும்.        இன்று world famous business man RICHARD BRANDSON அவர்கள் பற்றியும், அவரது 400 வகையான company  VIRGIN பற்றியும், அவரது வாழ்க்கை, தொழில் முன்னேற்றம் பற்றியும் அறிந்து கொண்டேன்.         அவரது வாழ்க்கை வரலாறு காணாத ஒரு சரித்தரமாக உள்ளது.  மற்றவர்களுக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்துள்ளார். 

அறிவாராய்ச்சி கல்வி

     "அறிவாராய்ச்சி"  எனும் சொல் "தத்துவம்-philosophy" எனும் கிரேக்க மொழி சொல்லிலிருந்து தோன்றியது.  இதில் மூன்று வகைகள் உள்ளன. அவையாவன,       1.உண்மை பொருளியல்,       2. அறிவாராய்ச்சி இயல்,       3. மதிப்பியல் ஆகியவை ஆகும்.      "அறிவு" என்பது "நியாயப்படுத்தபட்ட உண்மையான நம்பிக்கை என - பிளேட்டோ"  கூறுகிறார்.        எனது major-ல் இன்று கற்பித்தல் பயிற்ச்சியின் போது மாணவர்களுக்கு எவ்வாறு புரியும்படி நடத்த வேண்டும் என ஆசிரியர் demo class எடுத்தார். அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.       நமது மாவட்ட  கல்வி துறை அமைச்சர் திரு. கணேஷ மூர்த்தி, இவர் கரூர் மாவட்டத்தை சார்ந்தவர் எனவும் எனது ஆசிரியர் மூலம் அறிந்து கொண்டேன். இதுவும் அறிவாராய்ச்சி மூலம் பெற்ற அறிவாகும்.

கற்றல்

     இன்று (9. 7. 2018)  2-ம்  ஆண்டு கல்வியியல்  கல்லூரி முதல் நாள் ஆரம்பம். முதல் நாள் முதல் வகுப்பில் "கற்பித்தல்"  என்பது பற்றியும் கற்பித்தலை மாணவர்களிடம் சிறந்த முறையில் கொண்டு சேர்க்கும் முறைகளையும் அறிந்து கொண்டேன்.       "யோகா"  என்பது நமது உடல் நலம், மனம் நலம், தன்னம்பிக்கை, ஆர்வம்  ஆகியவை அதிகரிக்க உதவுகிறது.  யோகாவின் குரு "பதஞ்சலி முனிவர்" ஆவர்.  மேலும், திருமலை  கிருஷ்ணமாச்சாரியார், T.K.S. தேசிகாச்சார், T.K.V. ஐயங்கார் ஆகியோர் யோகா வளர்ச்சிக்காக பாடுபட்டனர்.       "கற்றல்"  என்பது ஒருவரது நடத்தை, செய்திறன், மனப்பான்மை, அறிவு ஆகியவற்றில் ஓரளவு நிலையான மாற்றத்தை ஏற்படுத்துவதாகும்