Posts

Showing posts from December, 2017

தாராளமயமாக்கம்

     அரசு சார்ந்த அனைத்து துறைகளிலும் அரசின் கட்டுப்பாட்டை நீக்கி தனியாரின் பங்கேற்பை அதிகரித்தல் எனும் செயலே தாராளமயமாக்கம் எனப்படும்.      இதனால் தரமான உற்பத்தி பொருள், நியாயமான விலை, நீடித்து உழைக்கும் தன்மை, மக்களின் தேவை நிறைவேற்றம் ஆகியவை எளிதில் நிறைவு பெறுகின்றன.       மேலும், உள்நாட்டு உற்பத்தி, விநியோகம், அந்நிய செலாவணி ஆகியவை அதிகரிக்கின்றன.

மதிய உணவுத்திட்டம்

     இந்தியா விடுதலைக்கு முன் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை ஆங்கில அரசு நடைமுறைப்படுத்தியது.      இந்தியா விடுதலை பெற்ற பிறகு தமிழக முதலவர் கே. காமராஜ் அவர்கள் 1962ல் இலவச மதிய உணவுத்திட்டமாக நடைமுறைப்படுத்தினார்.      பிறகு எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்று மதிய உணவுத்திட்டத்தை முதலமைச்சர் மதிய உணவுத்திட்டம் என பெயர் மாற்றம் செய்து சிறப்பாக நடைமுறைப்படுத்தினார்.

கணிதம் கற்பித்தல்

     இது என்னுடைய மேஜர் பேப்பர்.  இதன் மூலம் மாணவர்களுக்கு  எவ்வாறு தெளிவாக , புரியும்படி கணிதம் கர்பிபிக்க வேண்டும் என நான் நன்றாக புரிந்து கொண்டேன்.       மேலும், கணிதம் கற்றல் மற்றும் கற்பித்தல் மூலம் ஆசிரியர் மற்றும் மாணவர்களின்  அறிதிறன், பாடத்தை புரிந்து கொள்ளும் திறன்,  கற்றல் கற்பித்தல்  திறன் ஆகியவை மேம்பாடு அடைகிறது.       மாணவர் பெரும் அறிவானது அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் பயன்படும் வகையில் அமையுமாறு கணித பாடத்திட்டம் அமைக்கப்பட வேண்டும். உ.ம்,          வாழ்வில்  பயன்படும் கணிதம்,                    1. எண்ணியல்             2. வட்டி விகிதம், கூட்டு வட்டி, தனி வட்டிடி            3.முக்கோணவியல் போன்றவை பயன்படுகின்றது.

மூன்றாம் பாலினத்தவர்கள்

     ஒருவர்  தன்னை ஆண் அல்லது பெண் தன்மை கொண்டவர்கள் என தனது உள்ளார்ந்த திறன் மூலம் உணரத்து சமூக நடத்தைகளை கற்று அதற்கேற்ப நடத்தலை குறிக்கிறது.      ஆனால், ஒருவர் ஆணாக இருந்து பெண்தன்மையுடனோ அல்லது பெண்ணாக இருந்து ஆண் தன்மையுடனோ தன்னை உணர்தல், எதிர் பாலின பண்புகளை பின்பற்றுபவர்கள் மூன்றாம் பாலினத்தவர் எனப்படுவர்.

மாணவர் மைய கலைத்திதிட்டம்

     மாணவர்கள்  அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாராக  இருக்கும் வகையில் அவர்களை ஆயத்தம்  செய்யும்படி அமையும் கலைத்திட்டமே மாணவர் மைய கலைத்திட்டம் எனப்படும்.      இத்தகைய கலைத்திட்டம் மூலமாக மாணவர்களின் சிந்தனை திறன், பிரச்சினைக்கு தீர்வு காணும் திரன், தர்க்க ரீதியான சிந்தித்தல் திறன் , ஆக்கத்திறன்  போன்றவை அதிகளவில் வளர்ச்சி பெறுகிறது.        எனவேதான், அனைத்து கல்வியாளர்களும் மாணவர் மைய கலைத்திட்டமே சிறந்தது எனக்கூறுகின்றனர்.

பாடங்களை புரிந்து கொள்ளல்

     பள்ளி பாடத்தில் அண்மை காலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்பது மாணவர்களின் அறிவுத்திறன், எதிரகால தேவை, மாணவர்களின் உள்ளார்ந்த திறன்கள், நற்பண்புகள் ஆகியவைகளை மேம்படுத்தும் வகையில் பள்ளி பாடத்திட்டம் அமைத்தலை குறிக்கிறது.       பாடங்களை எளிதாக புரிந்து கொள்ளல், பிற சூழலில் கற்றலை பயன்படுத்துதல், சிக்கலை எளிமையாக தீர்க்க கற்றல் ஆகிய திறன்களை வளர்க்கும் வகையில் பள்ளி பாடம் அமைய வேண்டும்.

மொழி பயன்பாடு

     மொழி என்பது நாம் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தக்கூடிய தகவல்                  பரிமற்றத்தில் மொழியே முதன்மை மற்றும் முக்கியமான கருவியாக                        பயன்படுகிறது.        மொழி இரண்டு வகையில் பயன்படுகிறது.   அவையாவன,                                1.  பேச்சு மொழி                                                                 2.  எழுத்து மொழி          நாம் வாழ்வில் பல மொழிகளை பயன்படுத்துகிறோம். அதில் தாய் மொழியே முக்கிய பங்கு வகிக்கிறது.  இதன் மூலம் மொழியின் பயன்பாட்டை  நான் தெளிவாக புரிந்து கொண்டேன்.

கெஸ்டால்ட் கோட்பாடு

     கெஸ்டால்ட் எனும் ஜெர்மனி சொல்    முழுமையான அமைப்பு அல்லது முழுமையான கோலம் என்று பொருள்படும்.                                                           உ.ம்    ☺                                                                மேற்கண்ட படத்தில் தனியாக பார்த்தால் இரு புள்ளி, அரை வட்டம், ஒரு கோடு போல தெரியும்.                                   அதுவே  முழுமையாக பார்த்தால்        மனித முகம் போல  தெரியும்.

தற்காகால இந்தியாவும் கல்வியும்

      இன்று   2ம் தேர்வு எழுதினேன்.  அதில் இரண்டு கேள்விகள்  புதியதாக                இருந்தது.   அவைகளை தேர்வு முடிந்ததும் ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து               கொண்டேன்.       அந்த இரு கேள்விகளையும் புதிதாக படித்து புரிந்து கொண்டேன்.                         மேலும், தேரவும் நான் நன்றாக எழுதினேன்.   இதில் நேரமும் சரியாக                        கடைபிடிக்க கற்று கொண்டேன்.

சமூக நெறிப்படுத்துதுதல்

          சமூக நெறிப்படுத்துதல் என்பது குழந்தையை  சமூக எதிர்பார்ப்பிற்கேற்ப    அவர்ககளது நடத்தை, பணிகள், பழக்கவழக்கம் ஆகியவை  அமையுமாறு              குழந்தையை தாய் கற்று தரும் நெறிகளே  ஆகும்.                                                                           சமூக நெறிப்படுத்துதல்  முதலில் தாயிடம்  தொடங்கி பின் ஒப்பர் குழு,          சமூக உறவினர்கள், பள்ளி, ஆசிரியர், குடும்ப உறுப்பினர்கள் என                              அனைவரும் பங்கு கொள்ளும் செயலாகும்.                                                                                       இதன் மூலம் குழந்தை  நல்ல சமூக பழக்கவழக்கங்களை கற்று பலரோடு   இடைவினை ஆற்றி  சமூக நெறிகளை கற்கின்றது.

குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிச்சியும்

     வளர்ச்சி  என்பது கருவுற்ற நிலையில் இருந்து பிறப்பு வரை குழந்தை எடை     11,00,000  மடங்கு அதிகருக்கிறது.  மிகச்சிறிய கருமுட்டையில் சுமார் 3.25 கிலோ   எடையும், சுமார் 50 செ.மீ. நீளமுள்ள உயிரியாக குழந்தை வளர்ச்சி பெறுகிறது.       முன்னேற்றம் என்பது ஓர் உயிரியின் உருவத்தில் அல்லது அமைப்பில்  ஏற்படும் மாற்றம், அது இயங்கும் விதம் இவற்றில் ஏற்படும் மேம்பாடுகளை            ஒட்டு மொத்தமாக குறிப்பதே ஆகும்.       வளர்ச்சி  மற்றும் முன்னேற்றம் இவற்றிற்கு இடையிலான வேறுபாடு, இயல்புகள் , கோட்பாடுகள்  இவற்றை  பற்றி அறிந்து கொண்டேன்.