Posts

Showing posts from March, 2018

கூட்டுறவு கற்பித்தல்

     வகுப்பில் ஆசிரியர் பாடக் கருத்துக்களை தெளிவாக வழங்கிய பின் மாணவர்கள் சிலர் தங்களுக்குள் கற்றலை பகிர்ந்து கொள்ள முற்படுவர்.       நானும் எனது நண்பர்கள் குழுவாக இணைந்து எங்களது கற்றல் பாடங்களை பகிர்ந்து கொண்டோம்.       மேலும், அதில் எழும் சந்தேகங்ககளை வகுப்பில் பிற நண்பர்கள், ஆசிரியர் உடன் இணைந்து தீர்த்துக்கொள்வோம்.        இவ்வாறு எனது கற்பித்தல் செயலிலும்  "கூட்டுறவு கற்பித்தல்"  முறையை மேற்கோள்வேன்.  அதை மிகவும் பயனுள்ள வகையில் அமைக்க நான் அதிக பல முயற்சி மேற்கொள்ளுவேன்.

படித்தறிதல்

     ஒரு பாடப்பகுதியில் உள்ள அனைத்து கருத்துக்களையும் படித்து அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள், அறிவு வளர்ச்சி, செய்திறன், மனப்பான்மை, அனுபவம் ஆகியவை மூலம் நாம் அனைவரும் பெறும் அறிவாகும்.      "படித்தல்" எனும் செயல் மூலம் நமது கற்றல் - கற்பித்தல் சிறப்பாக அமையும். வாய் மொழி பேச்சு, வார்த்தை உச்சரிப்பு, தெளிவாக பேசுதல், வாசித்தல் போன்றவை எளிமையாக சிறப்பாக அமையும்.      படித்தல் மூலம் நாம் அனைவரும் பெறும் அறிவு, அனுபவம் என்றும் நம் மனதில் நீடித்து நிலைத்து நிற்கிறது.  படித்தல் செயல் சிறு வயது முதலே தொடர்வதால் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் திறன், பிறரின் கருத்து, எண்ணம், உணர்வுகளை புரிந்து கொள்ளும் ஆற்றலை வளர்க்கிறது.

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

     மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட ஆசிரியர்- மாணவர் இடைவினையோடு மட்டுமின்றி சிறந்த கற்பித்தல் கருவிகள் மூலம் நாம் அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தலாம்.      கற்பித்தல் வளங்களாக  கணினி, விசுவலைசர், ப்ரொஜக்டர், TLM, உருவ பொம்மைகள் என பல வகையான கற்பித்தல் வளங்கள் பயன்பாட்டில் உள்ளன.      ஒரு ஆசிரியராக நான் அனைத்து வளங்களையும் முறையாக பயன்படுத்திட கற்று கொண்டேன்.  மேலும் , அதை தொடர்ந்து  எனது கற்பித்தல் செயலில் நான் என்ன செய்ய வேண்டும் என எனது ஆசிரியரும் தெளிவாக விளக்கினார்.      கற்பித்தல் வளங்கள் மூலம் மாணவர்களின் அறித்திரன், கற்றல் தேர்ச்சி, மனப்பான்மை, நம்பிக்கை, முயற்சி, மேலும் கற்க ஆர்வம் தூண்டும் வகையில் அமைய வேண்டும் என புரிந்து கொண்டேன்.      

குழு கலந்தாய்வு

     இன்று கற்றல் கற்பித்தல் தேர்வு எழுதினேன்.  இதில் ஒரு வினா எனக்கு தெரியாது.       அது என்ன என்றால்  " மாணவர்கள் குழு கலந்த்தாய்வு"  என்பது பற்றிய ஆசிரியராகிய உன்னுடைய கருத்து என்ன?  என்பதாகும்.        இதை நான் என்னுடைய ஆசிரியரிடம் கேட்டேன்.  அதற்கு அவர் இந்த வினாவிற்கு உன்னுடைய சொந்த நடையிலே விடையளிக்கலாம் என்றார்.         அப்போது தான் நான் அந்த வினாவை  தெளிவாக புரிந்து கொண்டேன்.

கல்வியில் தாராளமயமாக்கம்

    மாணவர்கள் அனைவரும் இலவசமாக கல்வி மற்றும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள், வாழ்க்கை அனுபவங்கள் என அனைத்தும் தாராளமாக பெற முடியும் என்பதே  "கல்வியில் தாராளமயமாக்கம்"  எனப்படும்.      அதே போல பள்ளியில் உள்ள அனைத்து விதமான சலுகைகள், இயற்கை வளங்கள், அரசு சிறப்புத்திட்டங்கள், மத்திய உணவு உட்பட அனைத்தும் தாராளமாக கிடைக்க வேண்டும்.       எனவே, ஒரு பயிர்சி ஆசிரியராக நானும் எனது கற்பித்தலை மாணவர்களுக்கு தாராளமாக வழங்குவேன்.

குமர பருவத்தை புரிந்து கொள்ளல்

     இன்று Third Internal Exam ஆரம்பம்.  கடைசி நான்கு பாடம் தேர்வு.       நான் நன்றாக படித்து சென்றேன், ஆனால் வினாத்தாள் கடினமாக இருந்தது. ஏனென்றால் அதில் ஒரு வினா பாடத்தலைப்பாக இருந்தது அது எனக்கு  தேரியவில்லை.       தேர்வு முடுத்து ஆசிரியரிடம் கேட்டேன். அது அதன் நான்கு வகைகள்தான் என்றார்.  அவைகளாவன,       1.உற்று நோக்கல்,       2. நேர்க்கானல்,       3. தனியால் ஆய்வு,       4. கலந்துரையாடல் ஆகும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டேன்.