Posts

Showing posts from September, 2018

மாதிரி வினாத்தாள் தேர்வு

     இன்று காலை 2- ம் பாட வேலையில் 10- ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுக்காக தயார் செய்ய வேண்டிய நிலையால் பழைய மாதிரி வினாத்தாள்கள் கொண்டு அவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டது.      அடுத்து 8- ம் வகுப்பு மாணவர்களுக்கு சென்ற ஆண்டு முதல் பருவ வினாத்தாள் கொண்டு தேர்வு எழுத பயிற்சி அளிக்கப்பட்டது.      அதேபோல் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.      இவர்களுக்கு பாடத்தை மீண்டும் திருப்புதல் செய்யும் பொழுது ஆசிரியர் பாடக்கருத்துக்கள் அனைத்தையும் மீண்டும் ஒரு முறை தொகுத்து வழங்கினார்.  

வடிவியல் பயற்சி

     இன்று 8- ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு  "வடிவியல்"  பாடத்தில் உள்ள அனைத்து வகையான தலைப்புகளையும் மாணவர்களுக்கு புரியும்படி தெளிவாக நடத்தினேன்.       வடிவியலில் உள்ள நான்கு வகையான படங்களும், அவை வரையும் முறைகள், அதற்கான அளவீடுகள், பரப்பளவு காணும் முறைகள் என அனைத்தும் துல்லியமாக அளவிட மாணவர்கள் கற்றுக் கொண்டனர்.      மேலும், மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.  இதனால் மாணவர்களும் வடிவியல் படம் வரைதல்,  துல்லியமாக அளவிடும் முறைகள் இவற்றில் தேர்ச்சி பெற கற்றுக் கொண்டனர்.      நானும் எனது வழிகாட்டி ஆசிரியர் கூறும் கருத்துக்களை பின்பற்றி எனது கற்பித்தல் திறனை மேம்படுத்தி கொள்ள இது உதவியாக அமைகிறது.

சமூக அறிவியல் மன்றம்

      இன்று பள்ளியில்  "சமூக அறிவியல் மன்றம்"  நடைபெற்றது.   சுகாதாரம்: ::::::::::::::::::::::       இதில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் நாம் அனைவரும் அன்றாடம் வாழ்வில் எவ்வாறு சுத்தமாக, தூயமையாக இருக்க வேண்டும் என  "சுகாதாரம்"  பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள  நாடகம் நடத்தினர்.       * காலையில் எழுந்ததும் பல் துலக்குதல்,       * படித்தல்,       * கழிவறை பயன்படுத்துதல்,       * நாள்தோறும் பள்ளிக்கு செல்ல வேண்டும். சாலை பாதுகாப்பு மற்றும் விதிகள்: ::::::::::::::  ::::::::::::::::::::::  ::::::::::::::  ::::::::::::::::::       இதில்  8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்  "சாலை பாதுகாப்பு"  மற்றும் "சாலை விதிகளை பின்பற்றும் முறைகள்"  பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அவற்றுள் சில,      * வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிதல்,      * பயனத்தின் போது கைப்பேசி பயன்படுத்தக்கூடாது.