Posts

Showing posts from February, 2018

கணிதம் கற்பித்தல் பயிற்சி

     கடந்த மூன்று வாரங்களாக கணிதம் தொடர்பான அனைத்து விதமான கற்பித்தல் முறைகள், திட்ட வரைவு தயாரித்தல், மாணவர்களுக்கு தேர்வு வைக்கும் முறை, வினாத்தாள் தயாரித்தல், மதிப்பிடுதல் போன்ற அனைத்தையும் அறிந்து கொண்டேன்.       இந்த வாரம் என்னுடைய சக பயிற்சி ஆசிரியர்களுடன் கணிதம் கற்பிக்கும் முறைகளை கையாண்டு பல முறை கணித தலைப்பு ஒன்றை எங்கள் ஆசிரியர் முன் நடத்தி பயிற்சி பெற்றோம்.        எங்களது கற்பித்தலில் ஏதேனும் குறை இருந்ததால் அதை எனது நண்பர்கள், ஆசிரியர் தீர்த்து வைப்பார்கள்.  நானும் பிறரது கற்பித்தலை கவனித்து பின்னுட்டம் அளித்தல், அதில் சிறந்ததை எனது கற்பித்தலில் பயன்படுத்துவேன்.

திட்ட வரைவை புரிந்து கொள்ளல்

      இந்த வாரம் முதல் மூன்று நாட்கள் ( 19.2.2018 - 21.2.2018 ) திட்ட வரைவை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என புரிந்து கொண்டோம்.        அடுத்த இரண்டு நாட்கள் ( 22.2.2018 - 23.2.2018 ) தொடர்ந்து பல எடுத்துக்காட்டுகள் மூலமாக திட்ட வரைவு தயாரித்தலை தெளிவாக புரிந்து கொண்டேன். 50 மதிப்பெண்ணுக்கு திட்ட வரைவு தயாரித்தல்,          10×1=10 - புறவய வினா               5×2=10 - குறு வினா             4×5=20 - நெடு வினா           1×10=10 - கட்டுரை வினா        ------------------------                               50 -  மொத்த மதிப்பெண்        ------------------------         தேர்வு மூலம் மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடலாம்.

திட்ட வரைவு தயாரித்தல்

     "திட்ட வரைவு தயாரித்தல் (BLUE-PRINT)"  என்பது நாம் இதுவரை வகுப்பில் மாணவர்களுக்கு நடத்திய பாடப்பகுதியில் அவர்களின் புரிதல் திறன், தேர்ச்சி வீதம், அறிவுத்திறன் ஆகியவற்றை அறிந்து கொள்ள அதில் சில வினாக்கள் கேட்பதன் மூலம் அறியலாம். திட்ட வரைவை தயாரிக்கும் முறைகள்,       1.புற வய வினா,       2. குறு வினா,       3. நெடு வினா,       4. கட்டுரை வகை வினா        இதில் நமது தேவைக்கேற்ப மதிப்பெண்கள் கொண்டு வினாத்தாள் அமைக்கலாம் என்பதை புரிந்து கொண்டோம்.

அடைவுச்சோதனை உருவாக்குதல்

      இந்த வாரம்  ( 12. 2. 2018 - 16. 2. 2018 )  "அடைவுச்சோதனை உருவாக்குதல்"  என்பது பற்றி அறிய போகிறோம் என ஆசிரியர் கூறினார்.      இதில் நான்கு படிநிலைகள், அவை ஒவ்வொன்றும் தயாரிக்கும் முறைகள், அதை மாணவர்களுக்கு வழங்கும் விதம் ஆகியவை குறித்து ஆசிரியர் தெளிவாக விளக்கினார். நான்கு படுநிலைகளாவன,        1. சோதனை திட்டமிடல்,        2. சோதனையின் வடிவமைப்பு,        3. வினாத்தாள் திட்ட வரைவு,        4. வினாத்தாள் தயாரித்தல். ஆகியவை பற்றி தெரிந்து கொண்டோம்.

பாடத்திட்டம் தயாரித்தல்

     "கணிதம் கற்பித்தல் பணி பயிற்சி"  இந்த வாரம் ( 5. 2. 2018 - 9. 2. 2018 ) ஆகிய ஐந்து நாட்களுக்கு எங்கள் ஆசிரியர் கணிதம் கற்பித்தலுக்கான " பாடத்திட்டம் தயாரித்தல்" பற்றி தெளிவாக நடத்தினர்.       நாங்கள் மாதிரி பாடத்திட்டம் தயாரித்து ஒவ்வொருவரும் எங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொண்டோம்.       அதே போல ஒரு குறிப்பிட்ட பாடத்திற்கு எவ்வாறு பாடத்திட்டம் தயாரிக்க வேண்டும் எனவும் புரிந்து கொண்டோம்.  இந்த வாரம் முழுவதும் எங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது.

ஆயத்தம்

    இன்று நாங்கள் எங்கள் வகுப்பில் " கணிதம் கற்பித்தல் பணி பயிர்சி" செய்வதற்கான ஆயத்தம் மேற்கொள்ளப்படுகிறது.      அதற்காக நாங்கள் கற்பித்தல் கருவிகள், புத்தகங்கள், மின்னணு கருவிகள், பிற கற்பித்தல் சாதனங்கள் ஆகியவற்றை தயார் செய்து வைத்துள்ளோம். மீண்டும் நாளை சந்திப்போம்.

கற்பித்தல் திறன்கள்

   இன்று முதல் நாள் முழுவதும் வகுப்பில் ஆசிரியர் பணி பயிற்சி குறித்து கூறினார்.      "கற்பித்தல் திறன்ங்கள்"  என   "எட்டு " வகையான கற்பித்தல் திறன்கள் அதன் உட்கூறுகள், பயன்கள், குறைகள், வாழ்க்கை திறன்கள் என அனைத்தையும் அறிந்து கொண்டேன்.       நாளை முதல் முறையாக வகுப்புகள் தொடங்கும் என ஆசிரியர் கூறினார்.