Posts

Showing posts from August, 2018

அறிவியல் மற்றும் தமிழ் மன்றங்கள்

  இன்று பள்ளியில்          "அறிவியல் மன்றம்"        " தமிழ் மன்றம்"  ஆகிய இரண்டு மன்றங்கள் நடைபெற்றது. தமிழ் மன்றம்: :::::::::::::::::::::::::::::       *  அதில் 7- ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு மிகவும் சிறப்பாக  "பட்டத்து யானை"  பற்றி நாடகம் ஒன்று நடித்தனர். அறிவியல் மன்றம்: ::::::::::::::::::::::::::::::::::::::::         * இதில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு  "அன்றாடம் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டியதன்  அவசியம்" பற்றியும் விரிவாக, சிறப்பாக நாடகமாக நடித்துக் காட்டினார்கள்.

ART AND GRAFT

  இன்று பள்ளியில்   "ART AND GRAFT"  பயிற்சிக்காக டெல்லியில் இருந்து ஒரு பயிற்சி ஆசிரியர் வந்து பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் பலவிதமான வண்ணங்களில், பல்வேறு வகையான வடிவங்களில் பல கைவினை பொருட்கள் செய்து காட்டினார்.     மாணவர்களே பலவிதமான பொருட்களை செய்து பயிற்சி பெறுவதற்காக இலவச பயிற்சி புத்தகம், அதனோடு சில வண்ண காகிதத்தாள்களும் ரூ.30 - க்கு வழங்கினார்.      இந்த மாதிரி வகுப்புகள்  மாணவர்களின் கல்வி திறனையும், வாழ்க்கைக்கு உதவி செய்யும் வகையில் ஒரு கைத்தொழிலாகவும் அமைகிறது.       

இரண்டு மூளைவிட்டம், ஒரு கோணம்

     இன்று 8-ம் வகுப்பில் பயிர்சி - 4.3 -ல் இணைகரத்தில் அடுத்த இரண்டு                வகைகள் மற்றும் அதன் பரப்பாளவு, வரைமுறைகள் ஆகியவற்றை தெளிவாக நடத்தினேன்.       எனது வழிகாட்டி ஆசிரியரும் தேவையான ஆலோசனைகள், சிறந்த கற்பித்தலுக்கான வழிமுறைகளை கூறுகிறார்.        நான் அதற்க்காக வண்ண வரைபடத்தாளில் கலர் பேனாக்கள், டேப் என பலவற்றை பல வகைகளில் பயன்படுத்தி  "இணைகரம்"  மாணவர்களுக்கு புரியும்படி தெளிவாக பெறிதாக வரைந்து காட்டினேன்.       மாணவர்களும் அதை ஆர்வமுடன் கவனித்தனர்.  அவர்கள் மூலைவிட்டம் அளவிடும் முறை, குத்துயரம் காணும் முறை, கோணம் வைத்தல், பரப்பளவு காணல் என பல இடங்களில் உள்ள அனைத்து விதமான சந்தேகங்களையும் கேட்டனர்.        நான் எனது வழிகாட்டி ஆசிரியரிடம் அதை பற்றி தெரிந்து கொண்டேன். மாணவர்களுக்கும் தெளிவாக கூறினேன்.           

இணைகரம், அதன் பரப்பளவு காணல்

     இன்று 8-ம் வகுப்பில்  "செய்முறை வடிவியல்"  பாடத்தில் மூன்றாம் பிரிவான இணைகரம் மற்றும் அதன் பரப்பளவு காணும் முறை பற்றியும் தெளிவாக ,  விரிவாக நடத்தினேன்.       மாணவர்களும் அதை கவனித்து நோட்டில் எழுத்திக்கொண்டனர்.   பயிர்சி - 4.3 -ல் உள்ள சில கணக்குகளை நான் நடத்தினேன்.  அதே மாடலில் உள்ள கணக்குகளை வீட்டுப்பாடமாக அளித்தேன்.       இன்று எனது வழிகாட்டி ஆசிரியர் நான் கற்பிக்கும் போது எனது கற்பித்தல் முறை, கற்பித்தலுக்கு பயன்படுத்திய கருவிகள் அனைத்தையும் நல்ல முறையில் அமைய வேண்டும் என சில அறிவுரைகள் வழங்கினார்.       இதன் மூலம் நான் எனது கற்பித்தல் திறனை அதிகரிக்க உதவுகிறது.

சரிவகம் வரைதல், பரப்பளவு காணல்

     இன்று 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள நாற்கரத்தின் அமைப்பில் ஒன்றான  இரண்டாம் துணைத்தலைப்பு  "சரிவகம் மற்றும் பரப்பளவு காணும் முறை" பற்றி தெளிவாக நடத்தினேன்.       சரிவகம் அமைப்பு, அதன் பரப்பளவு காண சூத்திரம், பரப்பளவு கணக்கிடும் வழிமுறைகள், அதன் பண்புகள், வகைகள் என அனைத்தையும் வரிசையாக தெளிவாக கூறினேன்.       சரிவகம் கற்பித்தலுக்கான கணித கருவிப்பெட்டி, துணைக்கருவிகளான ஒரு மாதிரி பொருள், சரிவகம் வரைந்த வரைபடத்தாள் பயன்படுத்தினேன்.       மேலும், எனது பயிற்சி ஆசிரியர் எனது கற்பித்தலில் உள்ள நிறை, குறைகளை கூறினார்.  நான் அதை சரியாக பின்பற்றி தெளிவாக பாடம் கற்பிக்க கற்று கொண்டேன்.  இந்த வாரம்  "செய்முறை வடிவியல்"  பாடத்தில்        * நாற்கரம் -  பரப்பளவு,        * சரிவகம் - பரப்பளவு ஆகியவற்றை நடத்தினேன்.

நாற்கரம், பரப்பளவு காணல்

     இன்று 10-ம் வகுப்பில் எனது பயிற்சி ஆசிரியர்  "பிதாகரஸ் தேற்றம்"  நடத்தினார்.  இதனால் கற்றலில் மிகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கும் எளிதாக எவ்வாறு பாடம் நடத்த வேண்டும் என புரிந்து கொண்டேன்.      * 8-ம் வகுப்பில் இன்று  "செய்முறை வடிவியல்"  பாடத்தில் அடுத்த இரண்டு வகைகளான,       1. மூன்று பக்கங்கள், இரண்டு கோணங்கள்,       2. இரண்டு பக்கங்கள், மூன்று கோணங்கள் ஆகியவற்றை நடத்தினேன்.       7-ம் வகுப்பில் "கோண இருசம வெட்டி" எனது உடன் பயிற்சி பெற்ற ஆசிரியர் நடத்தினார்.  அதில் அவர் பயன்படுத்திய கற்பித்தல் முறைகளை கற்று கொண்டேன்.       எனத பயிற்சி ஆசிரியர் தேவையான அளவு தக்க சமயத்தில் கற்றல் குறித்த ஆலோசனை வழங்கி வருகின்றார்.

கற்பித்தல் பயிற்சி

     இன்று 7-ம் வகுப்பு பாடமான  "சமச்சீர் கோடு"  என்ற தலைப்பை நான் நடத்தினேன்.  அதற்க்காக பயன்படுத்திய கற்பித்தல் கருவிகள்;       * காகித மடிப்பு மூலம் செய்த சமபக்க முக்கோணம்,       * காகித மடிப்பு - சதுரம்,        * காகித மடிப்பு - ஒழுங்கு ஐங்கோணம்,       * காகித மடிப்பு - ஒழுங்கு அறுங்கோணம். ஆகிய கருவிகளை பயன்படுத்தி பாடம் கற்பித்தேன்.       எனது கற்பித்தல் பயிற்சி ஆசிரியரும் எனக்கு தேவையான உதவிகளை செய்து எனது கற்பித்தல் திறனை மேம்படுத்த துணையாக உள்ளார்.       மேலும், எனது கற்பித்தலையும், நான் தயாரித்த கற்பித்தல் கருவிகளையும் பார்த்து பாராட்டினார்.       

உற்று நோக்கல்

     நான் இன்று 7- ம் வகுப்பில் சதுரம், செவ்வகம், முக்கோணம், இணைகரம் ஆகியவற்றின் சமச்சீர் தன்மை, சூழல் சமச்சீர் இவைகளை பற்றியும் மற்றும்        6 - ம்  வகுப்பில் விகிதமும், அதை கணக்கிடும் முறை பற்றியும் தெரிந்து கொண்டேன்.      மேலும், உற்று நோக்கல் மூலம் பாடத்தை எவ்வாறு மாணவர்களுக்கு புரியும்படி வழங்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டேன்.      எனக்கு பயிற்சி அளிக்கும் வகுப்பில் உள்ள குறைந்த கற்றல் திரனுடைய மாணவர்களை நான் மிக கவனமாக பார்த்து அவர்களின் சந்தேகங்களை தீர்த்தும், அவர்களின் கற்றலை மேம்படுத்தவும் பயிற்சி பெருக்கின்றேன்.      எனது பயிற்சி ஆசிரியரும் எனக்கு மிகவும் நல்ல முறையில் பயிற்சி அளித்து எனது கற்பித்தல் திறனையும் மேம்பாடு அடையச்செய்ய தகுந்த முறையில் ஆலோசனைகள் வழங்கி வருகின்றார்.

கற்பித்தல் பயிற்சி செல்லுதல்

     06. 08. 2018 இன்று முதல் நாள்  " கற்பித்தல் பயிற்சி"  பெறுவதற்காக 80 நாட்கள் தொடர்ந்து அரசினர் உயர்நிலை பள்ளியில் எனக்கு பயிற்சி அளிப்பதற்காக பேராசிரியர்  P. சுப்பிரமணி அவர்களை அணுகினேன்.      அவரும் மிகவும் அற்புதமாக பாடம் நடத்தும் திரனுடையவர்.  கற்பித்தலில் அனைத்து விதமான திறன்களையும் பயன்படுத்தினார்.  நானும் அவர் பாடம் நடத்தும் விதம், திறன் பயன்படுத்தும் ஆற்றல் என அனைத்தையும் கற்றுக்கொண்டேன்.      இன்று வகுப்பில் " உற்று நோக்கல்"  மூலம் எனது பயிற்சி ஆசிரியர் 8, 6, 7 ஆகிய வகுப்புகளில் பாடம் நடத்தியதை கவனித்தேன். உற்று நோக்கிய பாடங்கள்,      * முக்கோணங்களின் வகைகள்,      * சமச்சீர், சுழலசமச்சீர் தன்மை,      * விகிதம் ஆகிய பாடங்களை உற்று நோக்கல் மூலம் தெளிவாக புரிந்து கொண்டேன்.